கிருஷ்ணகிரி


கிருட்டிணகிரி தமிழ்நாட்டின் 30வது மாவட்டமாக 2004-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

அமைவிடம்

கிருட்டிணகிரி மாவட்டமானது 
கிழக்கே வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் 
மேற்கே கர்நாடக மாநிலம் 
வடக்கே ஆந்திர மாநிலம் 
தெற்கே தர்மபுரி மாவட்டம் 
ஆகியவற்றை வரையரையாகக் கொண்டுள்ளது.

கிருட்டிணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலையின் கீழ் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, மற்றும் சென்னை - பெங்களூர் 46, பாண்டிச்சேரி - பெங்களூர் 66 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் இணைக்கப்பட்டுள்ளது.
  • கிருட்டிணகிரியின் மொத்த பரப்பளவு 5143 சதுர கிலோமீட்டர்
  • கடல்மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் உள்ளது.
  • மொழிகள் : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம்.
 

வரலாறு

கிருட்டிணகிரி நகரம் பல ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த இடம் பல ஆண்டு கால பழமைவாய்ந்த ஓவியங்களையும் கற்சிலைகளையும் கொண்டுள்ளது.

இதன் பகுதிகளான கிருஷ்ணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இந்த இடத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றம் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

இப்பகுதியில் "பாரா மகால்" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும். இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர ராமநாதன் தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் "குண்டனி" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு ஹோய்சால மன்னனான ஜெகதேவராயன், ஜெகதேவி என்னும் இடத்தில் 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.

முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.

"ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரி மாறியது.

மூதறிஞர் இராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்

வருவாய் பிரிவுகள்

  • கிருஷ்ணகிரி
  • ஓசூர்

வருவாய் வட்டங்கள்

  • கிருஷ்ணகிரி
  • ஓசூர்
  • போச்சம்பள்ளி
  • ஊத்தங்கரை
  • தேன்கனிகோட்டை

பஞ்சாயத்து ஒன்றியங்கள்

  • கெலமங்கலம்
  • தளி
  • ஓசூர்
  • சூளகிரி
  • வேப்பனபள்ளி
  • கிருஷ்ணகிரி
  • காவேரிபட்டிணம்
  • மத்தூர்
  • பருகூர்
  • ஊத்தங்கரை

மக்கள்தொகை

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை: 15, 46,700 ஆண்கள் : 7,95,718 பெண்கள் : 7,50,982 ஒரு சதுர கிலோமீட்டருக்கு 301 பேர் பிறப்பு விகிதம் : 21.5% இறப்பு விகிதம் : 4.1% படித்தவர்கள்  : 58.11% ஆண்களின் படிப்பு விகிதம் : 67.11% பெண்களின் படிப்பு விகிதம் : 48.62

சட்டமன்றத் தொகுதிகள்

14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி
வேட்பாளர்
கட்சி
ஊத்தங்கரை
மனோரஞ்சிதம் நாகராஜ்
அதிமுக
பர்கூர்
கிருஷ்ணமூர்த்தி
அதிமுக
கிருஷ்ணகிரி
கே. பி. முனுசாமி
அதிமுக
வேப்பனஹள்ளி
டி. செங்குட்டுவன்
திமுக
ஓசூர்
கோபிநாத்
காங்கிரஸ்
தளி
டி. ராமச்சந்திரன்
இ .க.க.

விவசாயம்

மாவட்டத்தின் விவசாயத்தில் நெல் 20,687 ஹெக்டேரிலும், கேழ்வரகு 48,944 ஹெக்டேரிலும், பயறுவகைகள் 48,749 ஹெக்டேரிலும், கரும்பு 4,078 ஹெக்டேரிலும் மாவட்டத்தின் பிரதான உற்பத்தியாக மாங்கனி 30,017 ஹெக்டேரிலும், தேங்காய் 13,192 ஹெக்டேரிலும், புளி 1,362 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.

சுற்றுலாத் தளங்கள்

கிருஷ்ணகிரி அணை

கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரியிலிருந்து 7கி.மீ தொலைவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

தளி

தளி கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது.





ராஜாஜி நினைவு இல்லம்

ராயக்கோட்டை 







கிருஷ்ணகிரி அணை